×

24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்க காமாட்சி அம்மன் ஆராதனை விழா

கிருஷ்ணகிரி, பிப்.22:  கிருஷ்ணகிரி 24 மனை தெலுங்கு செட்டியார்களின், சங்கத்தின் சார்பில், காமாட்சி அம்மன், தேவாதி அம்மனுக்கு 10வது ஆண்டு ஆராதனை விழா 3 நாட்கள் (22,23,24) நடைபெற உள்ளது என, 24 மனை தெலுங்கு  செட்டியார்களின் சங்கத்தின் தலைவர் துரைராஜன், சரவணா சில்க்ஸ் நிறுவனரும், நகரசெயலாளருமான எம்.ஏ.செல்வன், நகர பொருளாளர் முனுசாமி ஆகியோர் கூறினர்.
இன்று காலை 6.30 மணிக்கு, பழையபேட்டை  காமாட்சியம்மன் கோயிலில், அர்ச்சனை, 9 மணிக்கு  முத்துவிநாயகர், துர்க்கையம்மன் கோயிலில்  காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு ஆராதானை மற்றும் திருமாங்கல்யம்  சாத்துதல், யாக பூஜை வழிபாடு செய்தல், நன்பகல் மா விளக்கு பூஜை செய்தல், மாலை 3 மணிக்கு சுமங்கலி பூஜை மற்றும் மற்றும் திரு விளக்கு பூஜை செய்தல், மாலை 5 மணிக்கு  பேட்ராயசுவாமி மஹாலில் நினைத்தாலே இனிக்கும் இன்னிசை கச்சேரி நடன நிகழ்ச்சி உள்ளது. 23ம் தேதி நாளை காலை 9 மணிக்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள், 11 மணிக்கு கடந்த 10 ஆண்டுகளாக சங்க செயல்பாடுகளுக்கு இடமளித்தும், உறுதுணையாக இருந்து வந்துள்ள டாக்டர் சின்னராஜிக்கு சிறப்பு கௌரவிப்பு செய்தல், பிற்பகல் 2 மணிக்கு பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விளையாட்டு போட்டிகள், மாலை 5 மணிக்கு சங்க உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுதல், 8 மணிக்கு போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவதல், 24ம் தேதி ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள டிசிஆர் மாந்தோப்பு வளாகத்தில்  தேவாதி அம்மனுக்கு சக்தி பூஜை செய்தல் 1 மணிக்கு தேவாதி அம்மனுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
25ம் தேதி காலை 9 மணியளவில் முத்து விநாயகர், துர்க்கை அம்மன் கோயிலில் காமாட்சி அம்மனுக்கு நிறைவுநாள் பூஜை நடக்கிறது என தெரிவித்
துள்ளனர்.



Tags : Chettiyar Sangam Kamatchi Amman Aradhana Festival ,
× RELATED குவாரி குட்டையில் மூழ்கி பெண் பலி